நடிகர் விநாயகனை கைது செய்ய வலியுறுத்தி டி.ஜி.பி.யிடம் புகார்..!
முன்னாள் முதல்-மந்திரி வி.எஸ். அச்சுதானந்தனின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நேற்று முன்தினம் எர்ணாகுளத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் விநாயகன், 'இறக்கவில்லை... இறக்கவில்லை... எனது தலைவர் வி.எஸ் அச்சுதானந்தன் இறக்கவில்லை.... எங்களுடனேயே வாழ்கிறார்' என கையை உயர்த்திய படி ஆதரவு கோஷத்தை முழக்கினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானநிலையில், உம்மன் சாண்டிக்கு எதிராக அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட கருத்தை முன் வைத்து பல்வேறு தரப்பினரும் நடிகர் விநாயகனுக்கு எதிராக கடும் கண்டனங்களை பதிவிட்டனர்.
இதற்கிடையில், நடிகர் விநாயகன் தனது முகநூல் பக்கத்தில் 'எனது தந்தையும் செத்தார், வி.எஸ். அச்சுதானந்தனும் செத்தார், காந்தியும் செத்தார், நேருவும் செத்தார், இந்திராவும் செத்தார், ராஜீவ் காந்தியும் செத்தார், கருணாகரனும் செத்தார்' என்றும் சில அவதூறான கருத்தையும் கூறியுள்ளார்.
இது தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியநிலையில், விநாயகனை கைது செய்ய வலியுறுத்தி மாநில டி.ஜி.பி.யிடம் இளைஞர் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
.png)