1. Home
  2. தமிழ்நாடு

பிரபல யூடியூபர் VJ Siddhu மீது புகார்..!

Q

யூடியூப்பில் ‘ஃபன் பன்றோம்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் விஜே சித்து. தற்போது தன்னுடைய பெயரிலேயே (விஜே சித்து வி லாக்ஸ்) யூடியூப் சேனலைத் தொடங்கி குறுகிய காலத்திலேயே 2.58 மில்லியன் (25.8லட்சம்) ஃபாலோயர்களைப் பெற்றுள்ளார்.
இதுமட்டுமின்றி சினிமா பிரபலங்கள் தங்களது படத்தின் புரமோஷனுக்காக இவரது மொட்டை மாடி பார்டி எனும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அளவுக்கு பிரபலம் அடைந்துவிட்டார்கள்.
இந்நிலையில் செல்போனில் பேசியபடி காரை இயக்கியதாக புகார் எழுந்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதற்காக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பிரபல யூடியூபரும் பைக் ஓட்டுநருமான டிடிஎஃப் வாசன் மீது இப்படியான புகார் எழுந்தது.

Trending News

Latest News

You May Like