தனியார் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் , மாரிதாஸ் மீது புகார் !! சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு ..

X

யூ - டியூப்பில் அரசியல் விமர்சனங்கள் கொண்ட வீடியோக்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் மாரிதாஸ். பாஜக ஆதரவாளராக அறியப்படும் அவர் அண்மையில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சமீபத்தில் பிரபலமான தனியார் செய்தி தொலைக்காட்சியின் மீது புகார் அளித்திருந்தார். அது தொடர்பாக இணையத்தில் வீடியோ ஒன்றையும்  வெளியிட்டு இருந்தார். பின்னர் தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் தமக்கு விளக்கம் அளித்ததாக ஒரு வீடியோவும் வெளியிட்டார்.

ஆனால் இந்த மெயிலை அனுப்பவில்லை என்று குறிப்பிட்ட அந்த தனியார் தொலைக்காட்சி கூறிவிட்டது. பிறகு தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் , தமது பெயரை பயன்படுத்தி தவறான தகவல் பரப்பியதாக மாரிதாஸ் மீது புகார் தந்துள்ளார். இதையடுத்து சென்னை சைபர் க்ரைம் போலீஸார் மாரிதாஸ் மீது  பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newstm.in

Next Story
Share it