1. Home
  2. தமிழ்நாடு

ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தவரும் அதிரடி கைது!!

ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தவரும் அதிரடி கைது!!


முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பண மோசடி புகார் அளித்த விஜய நல்லதம்பி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி மீது ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கடந்த 5ஆம் தேதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி, ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தவரும் அதிரடி கைது!!

இதையடுத்து, சிறையில் இருந்து அவர் வெளியே வந்தார்.இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி மீது மோசடி புகார் அளித்திருந்த விஜயநல்லதம்பி என்பவரை போலீசார் கைது செய்தனர். ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த அவரை கோவில்பட்டியில் இன்று காலை 5.30 மணியளவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பியான விஜயநல்லதம்பியிடம் அதிமுகவை சேர்ந்தர ரவீந்திரன் என்பவர் தனது உறவினருக்கு ஆவினில் வேலை வாங்கி தருவதற்காக ரூ.30 லட்சம் கொடுத்துள்ளார். ஆனாலும் வேலையும் வாங்கி தராமல்,பணத்தையும் திருப்பி தராமல் விஜயநல்லதம்பி ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து ரவிந்திரன் விஜயநல்லதம்பி மீது புகார் அளித்தார்.

ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தவரும் அதிரடி கைது!!

விஜய நல்லதம்பியோ, பலபேரிடம் ஆவினில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடியை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கொடுத்ததாகவும் அவர் பணத்தை தருப்பி தராமல் மோசடி செய்ததாகவும் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

newstm.in

Trending News

Latest News

You May Like