கஞ்சா விற்பதில் போட்டி.. காலையிலே குடிக்க அழைத்துச்சென்று ரவுடியை போட்டுதள்ளிய நண்பர்கள் !

கஞ்சா விற்பதில் போட்டி.. காலையிலே குடிக்க அழைத்துச்சென்று ரவுடியை போட்டுதள்ளிய நண்பர்கள் !

கஞ்சா விற்பதில் போட்டி.. காலையிலே குடிக்க அழைத்துச்சென்று ரவுடியை போட்டுதள்ளிய நண்பர்கள் !
X

சென்னை திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் பகுதியில் உள்ள முட்புதர் அடந்த பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடந்ததை கண்ட மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த போது உயிரிழந்த கிடந்த இளைஞரின் தலை மற்றும் கை, கால் பகுதிகளில் வெட்டு காயங்கள் இருப்பது தெரியவந்தது.

பின்னர் அந்த நபரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கொலை செய்யப்பட்டது திருவேற்காடு அன்பு நகரைச் சேர்ந்த அஜித் (என்ற) அஜித்குமார் (23), என்பது தெரியவந்தது.

மேலும், காலையிலேயே மது அருந்துவதற்காக அஜித்தை, அவரது நண்பர்கள் இங்கு அழைத்து வந்து கொலை செய்திருப்பதும் தெரியவந்தது. கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதலால் கொலை நடந்ததா? அல்லது முன்விரோதம் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

newstm.in 

Next Story
Share it