12,200 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த பிரபல நிறுவனம்..!
டாடா கன்சல்டன்சி (TCS) நிறுவனத்தில் தற்போது பணியாற்றி வரும் 12,200 பேரை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை அந்நிறுவனத்தினன் முதன்மை செயல் அதிகாரி கிரிதி வாசன் வெளியிட்டு உள்ளார்.
அவர் மேலும் கூறி உள்ளதாவது;
பணிநீக்கம் செய்யப்பட உள்ள அனைவருமே இடைநிலை மற்றும் மூத்த நிலையில் பணியாற்றி வரும் ஊழியர்களாவர். ஒட்டு மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் இந்த ஆட்குறைப்பு என்பது வெறும் 2 சதவீதம் மட்டுமே. இது எளிதான முடிவு அல்ல.
செயற்கை நுண்ணறிவு மற்றும் அதனால் ஏற்படும் மாற்றங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்த தொழில்நுட்பத்தை பெரிய அளவில் பயன்படுத்துவது பற்றி யோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இந்த பணி நீக்க நடவடிக்கை என்பது, 2026ம் ஆண்டு நிதியாண்டில் (அதாவது ஏப்.2025 முதல் மார்ச் 2026 வரை) படிப்படியாக அமல்படுத்தப்படுகிறது.