1. Home
  2. தமிழ்நாடு

மாநகரப் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து முனையம் செல்ல 1 கி.மீ பயணிக்க வேண்டும் - பயணிகள் வேதனை..!

1

தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கான கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் கட்டப்பட்டது. மருத்துவ வசதி, வாகன நிறுத்துமிடம் என அதிநவீன வசதிகளுடன் சுமார் 393 கோடி ரூபாயில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்.

ஆனால் தென் மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்தாமல், கூடுவாஞ்சேரி, வண்டலூர் பகுதிகளில் நிறுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

பேருந்து முனையத்தில் முறையான தகவல் இல்லை என்றும், போதிய வழிகாட்டுப் பலகைகள் இல்லை என்றும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகளை அடையாளம் காணமுடியவில்லை எனவும் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மாநகரப் பேருந்து நிலையம் இருக்குமிடத்திலிருந்து, பேருந்து முனையம் செல்வதற்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய சூழல் இருப்பதாக பயணி ஒருவர் வேதனை தெரிவிக்கிறார்.

அதிநவீன வசதிகளுடன் பேருந்து முனையம் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், சாமானிய மக்கள் எவ்வித சிரமமும் இன்றி பேருந்துகளை பயன்படுத்தும் வகையில் சேவைகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது

Trending News

Latest News

You May Like