விஜய் சேதுபதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!

முத்தையா முரளிதரன் வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை எதிர்ப்பது தேவையற்றது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானதில் இருந்து விஜய் சேதுபதிக்கு எதிராக ஹேஷ்டேக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் விஜய்சேதுபதி இந்தப்படத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். விஜய் சேதுபதி இந்தப்படத்தை தவிர்க்க பார்க்க வேண்டும் என்றும், அப்படி செய்தார் ஈழத்தமிழர்களும், தமிழ் மக்களும் அவரை எப்போதும் நினைவுகூர்வார்கள் என தெரிவித்தார்.
அதே போல் இயக்குநர்கள் சேரன், சீனுராமசாமி ஆகியோர் விஜய்சேதுபதி இந்தப்படத்தில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
முத்தையா முரளிதரன் வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை எதிர்ப்பது என்பது பல விவகாரங்களை திசை திருப்பும் வகையில் உள்ளது என்றும், வேறு பல பிரச்சனைகள் இருக்கும்போது இதுகுறித்து விமர்சனம் செய்வது தேவையற்றது எனவும் தெரிவித்தார்.
newstm.in