வணிக சிலிண்டரின் விலை 12 ரூபாய் 50 காசுகள் உயர்வு..!
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தினந்தோறும் என்ற அடிப்படையிலும், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் என்ற அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், பிப்ரவரி மாதத்திற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
அந்த வகையில் இன்று பிப்ரவரி 1ம் தேதி வணிக சிலிண்டரின் விலை 12 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்று வரை 1925 ரூபாய் 50 காசுகள் என விற்பனையாகி வந்த கேஸ் சிலிண்டர் , இன்று முதல் 1937 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 918 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.
தொடர்ந்து வணிக கேஸ் சிலிண்டரின் விலை அதிகரித்து வருவதால், உணவகங்களில் உணவுப் பொட்ருட்களின் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது வெளியூர்களில் தங்கி உணவகங்களை நம்பி வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு பெரும் சுமையாய் கருதப்படுகிறது.