1. Home
  2. தமிழ்நாடு

வணிக கேஸ் சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு..!

1

ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.அந்த வகையில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.70.50 குறைந்து ரூ.1,840.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.30.50 காசுகள் குறைந்தது. இதன் மூலம் சென்னையில் 1,930.50 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர். அதைத்தொடர்ந்து கடந்தே மே 1ஆம் தேதி மேலும் 19 ரூபாய் குறைந்து, ரூபாய் 1,911க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் மேலும் ரூபாய் 70.50 குறைந்து தற்போது, 1,840.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
 

Trending News

Latest News

You May Like