வைரலாகும் தளபதியின் மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!! படக்குழு அதிர்ச்சி!!

மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். கொரோனா வைரஸ் பரவல் மாஸ்டர் படம் எப்போது ரிலிஸ் ஆகும் என்றே தெரியாத சூழலில் சிக்கியுள்ளது. ஆனால் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன.
இதனால் ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அந்த படத்தை வாங்க முயற்சி செய்து வருகின்றன. ஒருபுறம் திரையரங்குகள் திறப்புக்காக தயாரிப்பாளர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் சமூகவலைதளங்களிலோ விஜய் ரசிகர்கள் நாளுக்கு நாள் மாஸ்டர் படத்தின் எதாவது ஒரு அப்டேட்டாவது வருமா என எதிர்பார்த்து வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.
#ThalabthiDharisanam😍😘 @VijayImmanuel6 @Dr_Ecr_official @Lyricist_Vivek @MalavikaM_Fans @ramk8060 @OTFC_Off pic.twitter.com/jgIV7ufFtc
— Charles Fe💙 (@CharlesFe5) September 9, 2020
இந்நிலையில், மாஸ்டர் படப்பிடிப்பு தள வீடியோ ஒன்று கசிந்துள்ளது. ஸ்பாட்டில் ஒருவர் பிறந்தநாளை கொண்டாடிய போது அவருக்கு விஜய் கேக் ஊட்டி விட்ட வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இதனை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.