1. Home
  2. தமிழ்நாடு

தளபதி 65 உண்மை நிலை என்ன?

தளபதி 65 உண்மை நிலை என்ன?


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி உள்ள மாஸ்டர் திரைப்படத்திற்குப் பின், தளபதி விஜய் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில்’தளபதி 65’ உருவாவதாகவும், அந்தப் அப்டத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், வழக்கமான வேதங்கள் போல் இல்லாமல் இதில் முற்றிலும் மாறுபட்டு இருக்கும் என்றும், குறிப்பாக ஒரு வேடம் வித்தியாசமான வில்லன் வேடத்தில் விஜய் நடிக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின.

இந்தப் படம் அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்கான பட்ஜெட் 130 கோடி ரூபாய் என்றும், துப்பாக்கி, கத்தி, சர்கார் போன்ற வெற்றிப் படங்களிக் கொடுத்த கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் எகிருவதாகவும், இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் தான் ஒளிப்பதிவாளர் என்றும் கூறப்படும் நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக கூறினார்கள்.

’தளபதி 65’ படத்தின் அறிவிப்பு மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் ஒரு சிலர் இந்த படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து லைக்கா நிறுவனத்திற்கு கை மாற உள்ளதாகவும், இதற்கான இது குறித்த பேச்சுவார்த்தை நடந்தது வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் வெளிவந்த தகவல் வதந்தி என்றும் லைகா நிறுவனம் ’தளபதி 65’ தயாரிக்க தற்போது தயாராக இல்லை என்றும், ஏற்கனவே லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இந்தியன் 2’, ‘பொன்னியின் செல்வன் உள்பட பெரிய பட்ஜெட் படங்கள் இருக்கும் நிலையில் ’தளபதி 65’ படத்தை தயாரிக்கும் எண்ணம் லைக்கா நிறுவனத்திற்கு இல்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பின் போது லைக்கா நிறுவனத்திற்கும் இயக்குனர் ஏஆர் முருகதாசுக்கும் இடையில் பிரச்சனை வந்ததால், மீண்டும் இருவரும் இணைய வாய்ப்பே இல்லை என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிகின்றன.

newstm.in

Trending News

Latest News

You May Like