1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் அதர்வாவுக்கு விரைவில் திருமணம்!? பெண் யார் தெரியுமா?

நடிகர் அதர்வாவுக்கு விரைவில் திருமணம்!? பெண் யார் தெரியுமா?


முரளியின் மகனும், நடிகருமான அதர்வாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதர்வாவின் தம்பி ஆகாஷூக்கும், நடிகர் விஜய்யின் உறவுக்கார பெண்ணும், மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் பிரிட்டோவின் மகளுமான சிநேகாவுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

கொரோனா பரவல் காரணமாக திருமணம் எளிமையாக நடைபெற்றது. கொரோனா பரவல் குறைந்தபிறகு எல்லோரையும் அழைத்து வரவேற்பு நடத்தப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் அடுத்ததாக நடிகர் அதர்வாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கோவாவை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், இருவரும் வீட்டில் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதில் அதர்வாவின் அம்மா திருமணத்திற்கு ஒத்துக் கொண்டுள்ளதாக கூறப்படும் நிலையில், பெண் வீட்டிலும் விரைவில் கிரீன் சிக்னல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி ஒத்துக் கொண்டால் அதர்வாவின் தம்பி வரவேற்பும், அதர்வாவின் திருமணமும் ஒன்றாக நடந்தால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று கிசுகிசுக்கப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like