நகைச்சுவை நடிகர் விவேக்கின் நினைவு தினம் - மரக்கன்றுகள் வழங்கல்..!

நகைச்சுவை நடிகர் விவேக் படங்களில் வரும் காமெடிகள் நம்மை சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கும். இவரது நகைச்சுவையில் லஞ்சம், அரசியல், ஊழல்கள், மூட நம்பிக்கை உள்ளிட்டவை குறித்து சிந்திகக் வைக்கும் விதமாக அமைந்திருக்கும். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 17) விவேக்கின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், விவேக்கின் நண்பரான செல் முருகன் இன்று வைபவ் நடிக்கும் 27ஆவது படத்தின் படக்குழுவினர் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கினார்.