1. Home
  2. தமிழ்நாடு

நகைச்சுவை நடிகர் மதன் பாப் உடல்நலக் குறைவால் காலமானார்..!

Q

தமிழ் சினிமாவில் நீங்கள் கேட்டவை என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் மதன் பாப். 

குறிப்பாக நடிகர் விஜயின் பூவே உனக்காக, ப்ரண்ட்ஸ், கண்ணுக்குள் நிலவு, யூத், நடிகர் அஜித் குமாரின் வில்லன், கமல்ஹாசனின் பம்மல் கே சம்மந்தம், வசூல் ராஜா எம்பிபிஎஸ் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மதன் பாபுவுக்கு தற்போது 71 வயது ஆனது. சென்னை அடையாறு இல்லத்தில் மதன் பாபு வசித்து வந்தார். இந்நிலையில் தான் உடல் நலக்குறைவால் மதன் பாபு இன்று காலமானார். இன்று மாலை 5 மணிக்கு அவரது உயிர் பிரிந்துள்ளது.

மதன் பாபுவின் மனைவி பெயர் சுசிலா. இவர் பாடகி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஜனனி என்ற மகளும், அர்ஷித் என்ற மகனும் உள்ளனர். மதன் பாபுவின் உடல் சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு திரைத்துறையினர் மற்றும் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like