1. Home
  2. தமிழ்நாடு

மருத்துவமனையில் காமெடி நடிகர்.. உதவி செய்த இபிஎஸ்..!

Q

தமிழ் சினிமா உலகில் சிறந்த குணச்சித்திர நடிகராக திகழ்ந்தவர் குண்டு கல்யாணம். 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவரின் நடிப்பு மற்றும் உடல் தோற்றம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.
தீவிர அதிமுக தொண்டரான இவர் தேர்தல் காலங்களில் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராகவும் இருக்கிறார்
என்னுடைய அப்பா குண்டு கருப்பையா அந்த காலத்தில் நாடக கம்பெனி வைத்து மிகவும் பிரபலமாக இருந்தார். பாடங்களிலும் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தார். அந்த நேரத்தில், 60 பேரை வைத்து ஒரு நாடக கம்பெனி ஆரம்பித்தார் அது சரியாக போகாததால், லாஸ் ஆகிவிட்டது. இதனால், கடைசி காலத்தில் அவரின் இறுதிச்சடங்குக்கு கூட பணம் இல்லை. அந்த நேரத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான் உதவி செய்தார். அதன் பின் என்னை படிக்க வைத்து என் குடும்பத்தை அவர் தான் பார்த்துக்கொண்டார்.
நானும் அப்பாவைப்போல நன்றாக குண்டாக இருப்பேன். ஆனால், தற்போது கிட்னியில் பிரச்சனை இருப்பதால், வாரத்திற்கு இரண்டு நாள் டயாலிசிஸ் செய்து கொண்டு இருக்கிறேன். ஒரு முறை டயாலிசிஸ் செய்ய இரண்டு ஆயிரம் முதல் மூன்றாயிரம் வரை செலவாகிறது. கடந்த 3 வருடமாக டயாலிசிஸ் செய்து வருகிறேன். என்னுடைய மருத்துவ செலவையும் என்னையும் என் மகள் தான் பார்த்துக் கொள்கிறாள். மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற எந்த கெட்டப்பழக்கமும் எனக்கு இல்லை இருந்தாலும் கடவுள் எனக்கு இப்படி ஒரு பிரச்சனையை கொடுத்துவிட்டார்.
நடிகர் குண்டு கல்யாணம் கிட்னி பிரச்சனையால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் சிகிச்சைக்கு பண உதவி தேவை என செய்தி வெளியானது. இந்நிலையில், அவரின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்கும் என்று EPS தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தொண்டரான இவர் தேர்தல் காலங்களில் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருப்பவர் என்பது குறிப்பிடத்தகக்து.

Trending News

Latest News

You May Like