1. Home
  2. தமிழ்நாடு

ட்விட்டரில் ட்ரெண்டாகும்  #ComeBackRaina.. அணி நிர்வாகம் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு !

ட்விட்டரில் ட்ரெண்டாகும்  #ComeBackRaina.. அணி நிர்வாகம் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு !


ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 13ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல்போட்டி சென்னை - மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றிபெற்றது.

ஆனால் அதன்பின்னர் மோசமான தொடக்கத்தை சிஎஸ்கே எதிர்கொண்டுள்ளது. அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகளுடன் விளையாடியதில் தோல்வியைச் சந்தித்துள்ளது.

இந்த நிலையில் நாடு திரும்பிய ரெய்னா சிஎஸ்கே அணிக்குத் திரும்ப வர வேண்டும் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் சிஎஸ்கே அணியின் பவுலிங் மற்றும் பேட்டிங்கில் அணி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ட்விட்டரில் ட்ரெண்டாகும்  #ComeBackRaina.. அணி நிர்வாகம் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு !

அந்த வகையில் சிஎஸ்கே அணியிலிருந்து விலகிய ரெய்னா அணிக்குத் திரும்பினால் அணி பலமாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் ட்விட்டரில் #ComeBackRaina என்ற ஹேஷ்டேகுடன் பதிவிட்டு வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் தற்போது ட்ரெண்டாகி வருகின்றன.

ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்ற சுரேஷ் ரெய்னா பின்னர், தனிப்பட்ட காரணங்களால், ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். ஆனால் அவருக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்குதான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like