உடனே சென்னைக்கு வரவும்... திமுக எம்.பிகளுக்கு அழைப்பு விடுத்த தலைமை..!
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அப்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.பிக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. திமுக நேரடியாக 21 தொகுதிகளில் வென்றுள்ள நிலையில், திமுக எம்.பிக்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், திமுகவின் லோக்சபா குழு தலைவர், லோக்சபா குழு துணைத் தலைவர் பதவிகளுக்கு எம்.பிக்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.