வீட்டுக்குள் வா விளையாட்டு பொருள் இருக்கிறது.. முதியவரால் 8 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் !

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள மேல்மாந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (42). இவர் தரையில் கிடக்கும் பாட்டில், அட்டை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை சேகரித்து விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே தெருவைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அச்சிறுமியை அழைத்த ராமசாமி விளையாட்டுச் பொருட்கள் தருவதாக கூறி வீட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதில் பயந்து போன சிறுமி கூச்சலிடவே அவர் விடுவித்தார். இதனால் அவரிடம் இருந்து தப்பி வந்த 8 வயது சிறுமி ராமசாமியின் கொடூர செயலை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ராமசாமி மீது விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் ராமசாமியை கைது செய்தனர்.
குடியிருப்பு பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிக்கு முதியவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in