டாஸ்மாக் போய் வர “இலவச பஸ் பாஸ்”!
டாஸ்மாக் கடைக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியபிடம் குடிமகன் ஒருவர் மனு அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குடித்துவிட்டால் தான் அல்லப்பறை என்றால், சாதாரண நேரத்திலும் அலப்பறை செய்கிறார்கள் குடிமகன்கள். அந்த வகையில் தான் ஒரு குடிமகன் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
ஈரோடு பகுதியைச் சேர்ந்த செங்கோட்டையன் (40) என்ற விவசாயி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் தான் வெள்ளோட்டம்பரப்பு என்ற பகுதியில் இருப்பதாகவும், பல மாதங்களாகியும் இன்னும் அங்கு டாஸ்மாக் கடைகள் திறக்க வில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
எனவே பக்கத்து ஊருக்கு சென்று மது வாங்கி குடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.மது வாங்க தினமும் பக்கத்து கிராமம் செல்வதால் நேர விரயம் மற்றும் செலவு அதிகமாகிறது என்றும், உள்ளூரில் டாஸ்மாக் கடையை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
ஒருவேளை உள்ளூரில் கடை திறக்கும் வசதி இல்லை என்றால் தாங்கள் பேருந்தில் சென்று குடிப்பதற்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை பார்த்த குறைதீர்க்கும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த மனுவை மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி அந்த நபரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
newstm.in