1. Home
  2. தமிழ்நாடு

பதைபதைக்கும் வீடியோ..! கல்லூரி மாணவி மீது மாடு மோதியதில் தூக்கி வீசப்பட்ட மாணவி படுகாயம்..!

1

சமீப காலமாக சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால், பல்வேறு தெருக்கள் வழியாக நடந்து செல்பவர்களும், பைக்கில் செல்பவர்களும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். ஒருசில நேரங்களில் பைக்கில் செல்பவர்கள் மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்து உயிரிழப்புகள் நிகழ்கிறது. இதற்கு மாநகராட்சி தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

 

அதன் ஒரு பகுதியாக அபராதம் விதிப்பது, சுற்றித்திரியும் மாடுகளை சிதைப்பிடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், திருமால் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி மீது மாடு மோதிய விபத்தில் படுகாயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் அதிகம் செல்லக்கூடிய நெரிசலான இடங்களில், மாடுகள் ஆங்காங்கே சுற்றி திரிவது போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருப்பதாக மக்கள் புகார் தெரிவித்தனர். சாலைகளில் திரியும் மாடுகளால், தொடர் விபத்துகள் ஏற்படுவது வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 


 

Trending News

Latest News

You May Like