ஊரடங்கின் போது , காதலனை கரம் பிடித்த கல்லூரி மாணவி !!

ஊரடங்கின் போது , காதலனை கரம் பிடித்த கல்லூரி மாணவி !!

ஊரடங்கின் போது , காதலனை கரம் பிடித்த கல்லூரி மாணவி !!
X

திருச்சி சிந்தாமணி காந்தி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் வினோத் (25). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஜீவாநகரை சேர்ந்தவர் ஜீவிதா (20). இவர், திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி 3 ம் ஆண்டு படித்து வருகிறார்.

கல்லூரி அருகில் பூசாரி தெருவில் ஜீவிதாவின் தோழி வீடு உள்ளது. அடிக்கடி தோழி வீட்டுக்கு அவர் சென்று வருவது வழக்கம். அப்போது தோழி மூலம் வினோத் அறிமுகமானார். தோழி மூலம் இருவரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் நட்பாக பழகினர்.

பின்னர் அதுவே காதலாக மலர்ந்தது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர்கள் காதலித்து வந்தனர். மகளின் காதல் விவகாரம், பெற்றோருக்கு தெரிய வந்தது. காதல் ஜோடி வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்ப்பு கிளம்பியது. கொரோனா ஊரடங்கு முடிந்ததும் மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஊரடங்கு வேளையிலும் காதலில் பிடிவாதமாக இருந்த ஜீவிதா, வீட்டை விட்டு வெளியேறி காதலன் வினோத்தை கீழ சிந்தாமணியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் கரம் பிடித்தார். காதலன் வீட்டார் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

இந்தநிலையில் மகளை மீட்டுத்தரும் படி கோட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் இருவரின் பெற்றோரையும் போலீஸ் நிலையம் வரச் செய்தனர். இருதரப்பு பெற்றோரிடம் போலீசார்  சமாதானம் பேசினார். அப்போது ஜீவிதா, காதலனுடன் தான் செல்வேன், பெற்றோருடன் செல்ல மாட்டேன் என உறுதியாக தெரிவித்தார்.

முடிவில் போலீசார் ஜீவிதா விருப்பப்படியே காதலனுடன் அனுப்பி வைத்தனர். சிறு வயது முதல் வளர்த்து , எது பிடிக்கும் , பிடிக்காது என தெரிந்து கொண்டு வாலிபம் ஆனதும் , தங்களது பிள்ளைகளை உறவினர்கள் அனைவரின் முன்னாலும் , இந்த சமூகத்தின் முன்னாலும் திருமணம் நடத்த வேண்டும் என பெற்றோர்களுக்கு மிக பெரிய கனவு இருக்கும். அதை இது போன்று காதல் செய்து பிள்ளைகள் தங்களின் வாழ்க்கையை தாங்களாகவே தேடி கொள்வது வருத்தமளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Newstm.in

Next Story
Share it