1. Home
  2. தமிழ்நாடு

நவம்பர் 1 முதல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்!

நவம்பர் 1 முதல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்!


2020-21 கல்வியாண்டின் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பின் முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

அதனால் மாணவர் சேர்க்கையை அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் முடித்துவிடவேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மாணவர்களுக்கு அடுத்தாண்டு மார்ச் 8-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை முதல் செமஸ்டர் தேர்வுகளும், அடுத்த பருவத்தேர்வுக்கான வகுப்புகள் அடுத்தாண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈவன் செமஸ்டர் அடுத்தாண்டு ஆகஸ்ட் 22 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் கொரோனா பாதிப்பு காரணமாக மாணவர்களின் பெற்றோர் கல்லூரி சேர்க்கைக்கு கட்டிய பணத்தை திரும்ப பெற விரும்பினால் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் முழுத் தொகையும் அளிக்க வேண்டும் என்று ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like