காலேஜ் அட்மிஷன் 2025 : என்னென்ன சான்றிதழ்கள் தயாராக இருக்க வேண்டும்?
முதலில் வாங்க வேண்டிய முக்கிய சான்றிதழ்கள்
மதிப்பெண் சான்றிதழ்
மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate – TC)
இரண்டும் பள்ளியிலிருந்து உடனே பெற்று வைத்துக் கொள்ள வேண்டும்.
மற்ற கட்டாய சான்றிதழ்கள்
ஆதார் அட்டை இருப்பது கட்டாயம். திருத்தங்கள் இருந்தால் இ-சேவை மையத்தில் திருத்திக் கொள்ளலாம்.
பிறப்புச் சான்றிதழ்
இல்லையெனில் தமிழக அரசு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இருப்பிடச் சான்றிதழ்
தமிழக அரசு ஒதுக்கீட்டில் சேர்வதற்காக முக்கியமானது.
ஜாதிச்சான்றிதழ்
அரசு ஒதுக்கீட்டிலும், கல்வி உதவித் தொகைகளிலும் தேவைப்படும்.
வருமானச் சான்றிதழ்
கல்வி உதவித் தொகை, கல்விக்கடன், அரசு நலத்திட்டங்களுக்கு பயன்படும்.