1. Home
  2. தமிழ்நாடு

கலெக்டர் அதிரடி : நந்தி மலைக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு ஒரு மாதம் தடை..!

11

பெங்களூருவாசிகள் வார விடுமுறை நாட்களில் தங்கள் பொழுதை கழிக்க உகந்த இடம் இந்த நந்தி மலை தான். காலை நேரத்தில் கடுமையான வழக்கமாக சுற்றுலா பயணிகள், சூரிய உதயத்தை காண நந்தி மலைக்கு செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இது தவிர புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் காதலர்கள் அதிகம் கூடுவதால் நந்தி மலை சாலைகளில் வாகன ஓட்டிகளால் திணறுவது வழக்கம். இது சுற்றுலா பயணிகளை பாதித்து வந்தது. இதுதொடர்பான வீடியோக்களையும் நாம் அண்மை காலங்களில் கண்டிருக்கிறோம். இந்த நிலையில் சுற்றுலா பகுதியான நந்தி மலையில் சாலை சீரமைப்பு பணிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

இதற்கிடையே தற்போது நந்தி மலையில் சாலைகள் சீரமைப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் கையில் எடுத்துள்ளது. மலைப்பகுதியில் உள்ள 7 கிலோ மீட்டர் தூர சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நந்தி மலைக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ரவிந்திரா வெளியிட்ட உத்தரவில்," உலகப்புகழ் பெற்ற நந்தி மலையில் சுற்றுலா பயணிகள் கோரிக்கையை ஏற்று சாலை விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளது.
 

இதனால் மார்ச் 24ந் தேதி அதாவது நாளை முதல் 30 நாட்களுக்கு நந்தி மலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை தர தடை விதித்துள்ளது. வார விடுமுறை நாட்களில் பயணிகள் வசதிக்காக வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை 8 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 7.70 கிலோ மீட்டர் தூர மலைப்பாதையில் சீரமைப்பு பணிகள் நடக்க உள்ளதால் சுற்றுலா பயணிகள் முன்னெச்சரிக்கையாக திட்டமிட்டு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் நந்தி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், காதல் ஜோடிகள் ஏமாற்றம் அடைந்துள்ளது. கோடை காலத்தில் பெங்களூருவாசிகள் முக்கிய சுற்றுலா பகுதியாக நந்தி மலை உள்ளது. தற்போது சீரமைப்பு பணியால் தடை விதிக்கப்பட்டது அவர்களுக்கு சிரமத்தை சந்திக்க உள்ளனா்.

Trending News

Latest News

You May Like