கோவை வ.உ.சி உயிரியல் பூங்கா மான்கள் வனப்பகுதியில் விடுவிப்பு..!
கோவை வ.உ.சிதம்பரனார் பூங்கா அப்பகுதியில் முக்கிய பொழுதுபோக்கு இடமாக விளங்கி வருகிறது. வ.உ.சி உயிரியல் பூங்கா அருகிலேயே வ.உ.சி மைதானம் அமைந்துள்ளது. இந்த நிலையில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் இங்கு நடை பயிற்சி மேற்கொள்வார்கள்.
மேலும் வார விடுமுறை நாட்களில் குடும்பங்களுடன் வந்து பொது மக்கள் பொழுதை கழிப்பார்கள். இந்த நிலையில் மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் கடந்த 2022 ஆம் ஆண்டு வ.உ.சி உயிரியல் பூங்காவில் போதிய இடவசதி இல்லாததால், உயிரியல் பூங்காவின் உரிமத்தை ரத்து செய்தது.
இதனால் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உயிரியல் பூங்கா செயல்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது இங்குள்ள விலங்குகள், பறவைகள் ஆகியவை இடம் மாற்றம் செய்யப்பட்டன.
இந்நிலையில் அங்கு பராமரிக்கப்பட்டு வந்த 5 கடமான்கள் சிறுவாணி வனப்பகுதியில் விடப்பட்டுள்ளன.
#WATCH | கோவை வ.உ.சி பூங்காவின் உரிமம் ரத்து செய்யப்பட்டதால் அங்கு பராமரிக்கப்பட்டு வந்த 5 கடமான்கள் சிறுவாணி வனப்பகுதியில் விடுவிப்பு!#SunNews | #Deer pic.twitter.com/rpIvZhqnx4
— Sun News (@sunnewstamil) July 12, 2024