1. Home
  2. தமிழ்நாடு

2025 மே மாதத்திற்குள் கோவை செம்மொழி பூங்கா முடிக்க திட்டம்..?

1

செம்மொழிப் பூங்கா திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டினர். 165 ஏக்கர் நிலத்தில் அமையும் இந்த பூங்கா மொத்தம் 2 கட்டங்களாக கட்டப்படுகிறது; முதல் கட்டம் - 45 ஏக்கர், இரண்டாம் கட்டம் - 120 ஏக்கர்.

முதல் கட்டத்தில் 25 ஏக்கருக்கு மகரந்த வனம், நக்ஷத்திர வனம், மூலிகை வனம் என மொத்தம் 23 வித்தியாசமான பூங்காக்கள் இடம்பெறுகின்றன. மீதம் உள்ள 20 ஏக்கர் நிலத்தில் 1000 சதுர அடியில் உலக தரம் கொண்ட பல்நோக்கு மாநாட்டு மையம், திறந்தவெளி அரங்கம், 300 கார்கள் நிறுத்தும் அளவிற்கான பார்க்கிங் வசதி, செயற்கை நீரூற்று என மற்றும் சில கட்டமைப்புகள் உருவாகின்றன.

45 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வரும் செம்மொழி பூங்காவின் முதல்கட்ட பணிகளை 2025 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் மற்றும் பூங்கா பராமரிப்புக்கு தேவைப்படும் நீரை உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வழங்க ரூ.8 கோடி மதிப்பில் பூங்காவிற்கும் அந்த நிலையத்திற்கும் இடையே குழாய்கள் அமைக்கும் பணியை மாநகராட்சி நிறைவு செய்துள்ளது.

பல்நோக்கு மாநாட்டு மைய கட்டுமானப்பணிகள் 50% நிறைவு அடைந்துள்ளது. திறந்தவெளி அரங்கம், டிக்கெட் கவுண்டர்கள், நுழைவாயில், சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை மொத்த கட்டுமான பணிகள் 35% நிறைவுப்பெற்றுள்ளது. 

Trending News

Latest News

You May Like