1. Home
  2. தமிழ்நாடு

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற கோவை வீரர்..!

1

சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியின் குண்டு எறிதல் (Shot put ) நிகழ்வில் கோவையை சேர்ந்த இந்திய தடகள வீரர் கே.முத்துராஜா ஆடவர் குண்டு எறிதல் F-55 பிரிவில் 10.42 மீ தூரம் எறிந்து வெண்கல பதக்கம் வென்றார்.

தற்போது 31 வயதான இவர் 2015ல் ஒரு விபத்தினால் தனது கால்களை இழந்தவர்.கோவை சத்தி சாலை பகுதியில் உள்ள ஒரு பிசியோதெரபி மையத்தில் (SAHAI) இருந்த நிபுணர்களால் ஊக்கப்படுத்தபட்டு ஷாட் புட் பயிற்சி எடுத்தார். 2018 முதல் மாநில அளவிலான ஷாட் புட் போட்டிகளில் வெற்றி பெற்றவர் இவர்.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள பதிவில், சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில், கோவையைச் சேர்ந்த தடகள வீரர் திரு. முத்துராஜா அவர்கள் ஆண்கள் குண்டு எறிதல் (Shot Put) F-55 பிரிவில் வெண்கல பதக்கம் வென்றிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது பாரட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு உள்ளிட்ட அனைத்து தமிழக, இந்திய வீரர் வீராங்கனைகளுக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.தாங்கள் அனைவரும் வரும் காலங்களிலும் சர்வதேச அளவிலான போட்டிகளில் மேலும் பல சாதனைகளையும், பதக்கங்களையும் குவிக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 


 

Trending News

Latest News

You May Like