1. Home
  2. தமிழ்நாடு

கோவை மாநகராட்சி மேயராக போட்டியின்றி தேர்வு..!

1

கோவை மேயராக இதற்கு முன்னர் பதவி வகித்த கல்பனா ஆனந்தகுமார் கடந்த மாதம் 3ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் மூலம் தெரிவித்தார்.

உடல் நல காரணம் மற்றும் தனிப்பட்ட காரணங்களினால் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் கொடுத்த ராஜினாமா கடிதம் சிறப்பு கவுன்சிலில் கடந்த 8ம் தேதி முன்வைக்கப்பட்டது. இந்த கவுன்சில் மேயரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றது. 

அதிமுக மற்றும் சி.பி.ஐ.எம்  தரப்பில் இருந்து எதற்காக அவர் பதவி விலகுகிறார்? அதுபற்றி விவாதம் தேவை என கேள்வி எழுப்பினர். அதிமுக கவுன்சிலர் (வார்டு 47) பிரபாகரன், மேயர் கல்பனா மற்றும் அவர் கணவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. அதை விசாரிக்க வேண்டும் என கூறினார். 

இதற்கு நடுவே அடுத்த மேயரை தேர்ந்தெடுக்க அரசு அறிவிப்பை வெளியிட்டது. மறைமுக தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி தி.மு.க சார்பில் கோவை மேயர் வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார்.

கல்பனாவை போல இவரையும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் சிபாரிசு செய்துள்ளார் என செய்திகள் வெளியாகின. ரங்கநாயகி தேர்வானது கட்சியில் அந்த வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த சில சீனியர்களுக்கு ஏமாற்றமாக இருந்துள்ளது நேற்றும் இன்றும் நடைபெற்ற சில சம்பவங்களால் தெரியவந்தது.

இந்நிலையில் இன்று காலை ரங்கநாயகி வேட்பு மனுவை மாநகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரியமான சிவகுரு பிரபாகாரனிடம் வழங்கினார். அவரை தவிர வேறு யாரும் வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை.எனவே அவர் போட்டியின்றி மேயராக தேர்வானார்.இதில் ரங்கநாயகி வெற்றி பெற்று மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

Trending News

Latest News

You May Like