கோவை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பேச்சால் பரபரப்பு..!
பெண் காவல்துறை அதிகாரிகள் தொடர்பாக அவதூறு பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அவரது கையை சிறையில் 10 காவலர்கள் அடித்து உடைத்ததாக ஏற்கனவே புகார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது போலீசார் அழைத்துச் சென்றபோது, மீடியா முன்பு தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன். கோவை சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார்தான் எனது கையை உடைத்தார் என பேசிக்கொண்டே சென்றார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார். கோவை சிறையில் என் உயிருக்கு ஆபத்து. கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன்- சவுக்கு சங்கர் மீடியா முன்பு கூறியதால் பரபரப்பு
''என் கையை உடைத்தது அவர் தான்.. கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன்..'' - சவுக்கு சங்கர்...! #Covai | #SavukkuShankar | #GovtHospital | #CovaiPrison | #PolimerNews pic.twitter.com/ZRPtajDvuF
— Polimer News (@polimernews) May 13, 2024