கிணற்றில் தவறி விழுந்த மான்களை மீட்ட கோவை தீயணைப்பு துறையினர்..!
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த புத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் இன்று காலை 2 மான்கள் தவறி விழுந்துள்ளன. இதை பார்த்த அப்பகுதிமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததும் தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அணில் குமார் மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையிலான தீயணைப்பு துறையினர் மான்களை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
தீயணைப்பு துறையினர் எடுத்த முயற்சியின் காரணமாக அந்த 2 மான்களும் உயிருடன் மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது