கோவை மாநகராட்சி பள்ளிகள் 95.28% தேர்ச்சி..!
கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் செயல்படும் 27 மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் 95.28% தேர்ச்சி பெற்றுள்ளது. இது சென்ற கல்வியாண்டை விட 7.58% அதிகம் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விவரம் பின்வருமாறு :-
27 மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளிலிருந்து 748 மாணவர்களும், 1116 மாணவிகளும் என மொத்தம் 1864 பேர் ஏப்ரல் 2025-ல் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.
தேர்வு எழுதியவர்களில் 688 மாணவர்களும், 1088 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மொத்த மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை 1776 ஆகும். மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு 91.98%, மாணவிகளின் தேர்ச்சி விழுக்காடு 97.49% ஆகும். கோயம்புத்தூர் மாநகராட்சி பள்ளிகளின் மொத்த தேர்ச்சி விழுக்காடு 95.28 % ஆக உள்ளது.
இதில் கோயம்புத்தூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இராமகிருஷ்ணாபுரம், மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, ஒக்கிலியர்காலனி மற்றும் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, புலியகுளம் பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.