கோவை - சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி பயணிகள் கவனத்திற்கு..!
அரக்கோணம் ரயில்வே யார்டு பகுதியில் பாயிண்ட்ஸ் மற்றும் கிராசிங்கை மாற்றி அமைக்கும் பொறியியல் பணிகள் நடந்து வருகிறது.
இதன் காரணமாக, கோவை - சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை சென்ட்ரல் - கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் செப்டம்பர் 1ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது. அதே செப்டம்பர் 1ஆம் தேதி வரை, கோவையில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்படும் கோவை - சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (12680) காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்.
காட்பாடி - சென்னை சென்ட்ரல் இடையே இந்த ரயில் இயங்காது எனவும், அதேபோல செப்டம்பர் 1ஆம் தேதி, சென்னை சென்ட்ரல் - கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை சென்ட்ரல் - காட்பாடி இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மாலை 4.15 மணிக்கு காட்பாடியில் இருந்து புறப்பட்டு கோவை வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதேபோல, சென்னை சென்ட்ரல் - கொச்சுவேலி சிறப்பு ரயில் (06043) செப்டம்பர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, கொச்சுவேலி - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06044) ஆகஸ்ட் 29, செப்டம்பர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.