1. Home
  2. தமிழ்நாடு

கோவை கார் சிலண்டர் வெடிப்பு வழக்கு - மேலும் 4 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் ..!

1

கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இவ்வழக்கில் இதுவரை 15 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை என்.ஐ.ஏ சோதனை மேற்கொண்டு கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் விசாரணையின் போது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு சிலர் ஆட்கள் சேர்த்தது தெரியவந்தது. இதையடுத்து மேலும் ஒரு வழக்கை என்.ஐ.ஏ பதிவு செய்தது. ஏற்கனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பலர் மீது என்.ஐ.ஏ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், ஐ.எஸ் அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜமீல் பாஷா, முகமது உசைன், இர்ஷாத் மற்றும் சையது அப்துல் ரஹ்மான் ஆகிய நான்கு பேர் மீது என்.ஐ.ஏ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இவர்கள் நான்கு பேரிடம் என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இவர்கள் தேசவிரோத செயலில் ஈடுபட கோவையில் அரபி வகுப்பு நடத்துவது போல் மாணவர்களை மூளைச்சலவை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் பிரசங்கம் நடத்தி மூளைச்சலவை செய்யும் பணியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like