கோட் அப்டேட் : ட்ரெய்லர் ரிலீஸ் எப்போ தெரியுமா?
அண்மையில் யுவனின் இசையில் வெளியான "கோட்" படத்தின் பாடல் சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்களுக்கு உள்ளான நிலையிலும் யூடியூப் வலைதள பக்கத்தில் 13 மில்லியனுக்கும் அதிகமான பார்வையார்களை கடந்துள்ளது. இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் "கோட்" படத்தின் புதிய செய்தியொன்று வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
தளபதியின் "கோட்" படத்தின் ட்ரைலரானது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 இல் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது எதிர் வரும் 17ம் தேதி மாலை 5 மணியளவில் கோட் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டருடன் அறிவித்துள்ளார்இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் குஷியில் குதிக்கின்றனர்.
— Vijay (@actorvijay) August 15, 2024