குடியரசு தலைவருக்கு முதல்வர் கடிதம் எழுதியது அவரது தோல்வி பயத்தை காட்டுகிறது : அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் ஆளுநருக்கு மரியாதையே இல்லாத சூழலை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு கூறுவதை ஆளுநர் அப்படியே ஓப்பிக்க வேண்டுமா?. ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்று நானே சொல்லி இருக்கிறேன். தமிழ்நாடு அரசு ஆளுநரை வில்லனாக காட்டுவதை ஏற்கமுடியாது. குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியது, அவரது தோல்வி பயத்தை காட்டுகிறது. திமுக அரசு நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளை விட்டுவிட்டு ஆளுநரை சீண்டிப் பார்க்கிறது. ஆளுநரை ஒருமையில் பேசி, தரக்குறைவாக விமர்சிப்பது மிகவும் தவறானது.
செந்தில் பாலாஜியை புத்தராகவும், உத்தமராகவும் திமுகவினர் சித்தரிக்கின்றனர். தங்கள் தவறுகளை மறைக்க ஆளுநரை வில்லனாக காட்ட திமுகவினர் முயற்சிக்கின்றனர். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் குற்றவாளிகளின் புகலிடமாக மாறியுள்ளது. சட்டம் ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது மீண்டும் மீண்டும் புலப்படுகிறது. இவ்வாறு கூறினார்.