1. Home
  2. தமிழ்நாடு

8 அடி கலைஞர் சிலையை திறந்துவைத்தார் முதலமைச்சர்!

1

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் வெண்கல சிலை மற்றும் கலைஞர் அறிவுார் நூலகம் ஆகியவற்றை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 

கோவை கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் 8 அடி உயரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.அங்குள்ள கட்டிட வளாகத்தில் கலைஞர் அறிவுசார் நூலகம், அதன் எதிரே 116 அடி உயர பிரமாண்ட கொடிக்கம்பமும் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கருணாநிதி சிலை, நூலகம், கொடிக்கம்பம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாக்களில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநகர மேயர், கவுன்சிலர்கள், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.




 

Trending News

Latest News

You May Like