மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கிறார் முதலமைச்சர்!

குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தண்ணீர் திறக்க உள்ளார்.
மேட்டூர் அணை நீர் திறப்பு குறித்து கடந்த மாதம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் அவர் வெளியிட்ட அறிவிப்பில், 50 நாட்கள் வரை திறந்துவிட போதுமான அளவு நீர் மேட்டூர் அணையில் இருப்பதாக தெரிவித்தார். மேலும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக திறந்து வைக்க உள்ளார். இதற்காக முதல்வர் சேலம் புறப்பட்டுச் சென்றுள்ளார். நாளை (12.06.20) சேலம் முகாம் அலுவலகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் முதலமைச்சர் மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு காலை 9.30 மணிக்கு செல்கிறார். பின்னர் காலை 10 மணிக்கு மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்துவிடுகிறார்.
newstm.in