விழுப்புரத்தில் 2 கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்குகிறார் முதல்வர்..!
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பொருட்களை தாய்மார்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி சைதாப்பேட்டையில் நேற்று நடந்தது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
இந்த திட்டத்தில் 65 ஆயிரத்து 503 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலினின் எண்ணத்தில் உருவான மக்களை தேடி மருத்துவம் திட்டம் மிகச் சிறப்பாக நிறைவேறி வருகிறது. 2 கோடி பயனாளிகளை நெருங்கி கொண்டிருக்கிறது.
வருகிற 29-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் விழுப்புரத்தில் அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க செல்கிறார். அப்போது மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2 கோடியே ஒன்றாவது பயனாளியை திருப்பசாவடி மேடு, கோவிந்தபுரம், ஏணதி மங்கலம் ஆகிய 3 கிராமங்களில் இருந்து தேர்வு செய்யப்படுவார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இலவச மருந்து பெட்டகத்தை வழங்குவார். இவ்வாறு அவர் கூறினார்.