1. Home
  2. தமிழ்நாடு

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களும் உஷாராக இருக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்..!

Q

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று(மே 19) ஆலோசனை கூட்டம் நடந்தது.

காலை 11 மணிக்கு நடந்த கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்கும் கடமை அரசுக்கு உள்ளது.

மாநில கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரம் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய அறிவுத்தப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையின் போது திடீர் வெள்ளம் நிலச்சரிவை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அனைத்து மாவட்ட கலெக்டர்களும் உஷாராக இருக்க வேண்டும்.

மழைக்காலத்திற்கு தேவை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடலோர மாவட்டங்களில் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். பேரிடர்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பாகவே இருக்கும். பேரிடர் முகாம்கள் தயார் நிலையில் இருப்பதுடன், உணவு உள்ளிட்டவையும் போதுமான அளவு உள்ளதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Trending News

Latest News

You May Like