1. Home
  2. தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் இதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும் - இ.பி.எஸ்..!

Q

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.அறிக்கை: சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 8ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அரசு சேவை இல்லத்திலேயே ஒரு 8ம் வகுப்பு மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது இந்த தி.மு.க., அரசு முற்றிலும் செயலிழந்து நிற்பதையே உணர்த்துகிறது. முதல்வர் ஸ்டாலின் இதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.

அரசு சேவை இல்லத்தில் உள்ள சிறுமிகளைக் காக்க வேண்டிய காவலாளியே இப்படி ஒரு கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது, குற்றம் செய்பவர்களுக்கு இந்த ஆட்சி எடுக்கும் நடவடிக்கைகள் மீது துளி கூட பயம் இல்லை என்ற குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையிலேயே உள்ளது. இந்த காவலாளியால் மற்ற சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப் பட்டுள்ளனரா? என்பதை போலீசார் தீர விசாரிக்க வேண்டும்.

தமிழகம், டில்லிக்கு Out Of Control-ஆக இருப்பதாக யாரோ எழுதிக் கொடுத்த டயலாக்கைப் பேசும் முதல்வரே, உங்கள் ஆட்சியில் Out Of Control ஆக இருக்கும் பாலியல் 'SIR'-களை எப்போது Control செய்யப் போகிறீர்கள்? காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள மாணவிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள காவலாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like