1. Home
  2. தமிழ்நாடு

ஜல்லிக்கட்டை மீட்டுக் கொடுத்து திமுக என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்... ஆனால் அது உண்மையில்லை...

1

குடியரசு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ ஜெயக்குமார் மற்றும் எம்எல்ஏக்கள், அதிமுகவினர் பங்கேற்றனர். மேலும் இந்நிகழ்வை எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் இந்த புறக்கணித்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை கூறியதாவது :

புதுச்சேரியில் பல நல்லத்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிறைவேற்றி வருகிறார்கள்.

குடியரசு தினத்தையொட்டி இரண்டு மாநிலங்களில் தேசிய கொடியை ஏற்றியதை பெருமையாக நினைக்கிறேன்.

ஆளுநர் மாளிகை விருந்துக்கு அழைப்பு விடுத்தால் வரவேண்டும். தெலங்கானாவில் ஏற்கனவே பலமுறை அழைத்தும் முந்தைய முதல்வர் வரவில்லை. கொள்கைகள், கட்சிகள் மாறுபடலாம். ஆனால் அழைப்பு விடுத்தால் அன்போடு பங்கேற்க வேண்டும். அரசியல் அனைத்து இடத்திலும் புக ஆரம்பித்தால் நட்பு என்பது இல்லாமல் போய்விடும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாற்றுக் கொள்கை உடையவர்கள் நட்புடன் பழகி இருக்கிறார்கள். ஆனால் விருந்துக்கு வராததையே பெருமையாக கருதக்கூடாது.

விருந்துக்கு வரவில்லை என சொல்வதையே நாகரீகமாக சில கட்சிகள் கருதுகின்றன. இதுதவிர்க்கப்பட வேண்டும். ஜல்லிக்கட்டை மீட்டுக் கொடுத்து திமுக தான் என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்கள் .

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற அதிக முயற்சி செய்தவர் பிரதமர் மோடி. 3 மத்திய அமைச்சர்கள் ஒரே நாளில் கையெழுத்திட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது என தமிழிசை தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like