அப்பல்லோவுக்கு விரைந்தார் முதல்வர் ஸ்டாலின்..!

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்த போதிலிருந்தே தயாளு அம்மாள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டு, பின்னர் வயோதிகம் காரணமாக சில அசௌகரியங்களை சந்தித்து வந்தார். சில ஆண்டுகளாகவே அவர் பொதுவெளியில் வருவதில்லை.
கடந்த ஆண்டு மகள் செல்வியின் கணவர் முரசொலி செல்வம் மரணமும் தயாளு அம்மாளை புரட்டி போட்டது. இந்த நிலையில் கடந்த 1-ஆம் தேதி தனது 72-ஆவது பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின், கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு சென்று தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்று வந்தார்.
இந்த நிலையில் தயாளு அம்மாளுக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தயாளு அம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தனது தாயாரைக் காண மருத்துவமனைக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்து அறிந்தார். தற்போது 2ஆவது நாளாக தயாளு அம்மாளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தனது தாயின் உடல்நிலை குறித்து கேட்டறிய மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.