1. Home
  2. தமிழ்நாடு

உக்கடம் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!

1

கோவை உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி, பாலக்காடு, பகுதிகளுக்கு விரைந்து செல்லும் வகையில் ரூ. 481.95 கோடி மதிப்பீட்டில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை 3.8 கி.மீ நீளத்துக்கு கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில் கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே முதல் கட்டமாக ரூ. 121 கோடி மதிப்பில் மேம்பாலமும், இரண்டாம் கட்டமாக ரூ. 195 கோடியில் மேம்பாலமும் கட்டும் பணி நடந்தது. மொத்தமாக நில எடுப்பு பணிக்கு ரூ.152 கோடி செலவிடப்பட்டது. 

மொத்தம் ரூ.481.95 கோடி மதிப்பில் இரு மேம்பால பணிகளும் நடத்தி முடிக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்டன. இந்தப் பாலத்தில் மொத்தம் 7 ஏறு, இறங்கு தளங்கள் உள்ளன. இதில், 6 ஏறு, இறங்கு தள பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 

இந்த மேம்பாலத்தை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பயணித்தார். இந்த நிகழ்வில், நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர்கள் முத்துசாமி, பொன்முடி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மேயர் ரங்கநாயகி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், நெடுஞ்சாலை துறை அரசு செயலாளர் செல்வராஜ், தலைமைப் பொறியாளர் சத்ய பிரகாஷ், கோவை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர். 

Trending News

Latest News

You May Like