1. Home
  2. தமிழ்நாடு

மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின்... வெளியான புகைப்படம்..!

1

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மூன்று தினங்கள் மருத்துவமனையில் ஓய்வில் இருக்க வேண்டும் என அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. முதலமைச்சருக்கு சில பரிசோதனைகள் செய்ய வேண்டி உள்ளதாகவும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து நேற்று (ஜூலை 22) தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சுமார் இரண்டரை மணிநேரத்திற்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் மீண்டும் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு திரும்பினார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 23) வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மா. சுப்பிரமணியன், "மு.க. முத்து மறைந்த அன்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒருநாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்திருக்கிறார். அடுத்த நாள் காலையில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வாக்கிங் சென்றார். அப்போது அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டிருக்கிறது. முதலமைச்சர் உடல் நலன் நன்றாக உள்ளது, அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இன்று பரிசோதனை முடிவுகள் வெளிவரும். முதல்வர் வீடு திரும்புவது குறித்து மருத்துவமனை தரப்பில் அறிவிப்பார்கள்" என்றார். 

இந்நிலையில் உங்களுடன் ஸ்டாலின்' திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடி கேட்டறிந்தார். நேற்று, உங்களுடன் முதல்வர் திட்டம் தொடர்பாக, தலைமை செயலாளர் முருகானந்தம் உடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று (ஜூலை 23) தமிழக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடியே, உங்களுடன் ஸ்டாலின் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து கோவை, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
 

அப்போது முகாமிற்கு வந்த பொதுமக்களிடமும் உரையாடினார். அவர் பயனாளிகளிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து கலந்துரையாடினார். அப்போது முதல்வருடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Trending News

Latest News

You May Like