கோவை வந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு!
விளாங்குறிச்சி பகுதியில் கட்டப்பட்டுள்ள புது தகவல் தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைப்பதற்காக கோவை வந்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் நேரில் சந்தித்து வரவேற்றார். விமான நிலையத்திலிருந்து வழி நெடுக முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி கோவை மாநகரில் வருகிற நவம்பர் 5, 6 ஆகிய தேதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. கனரக வாகனங்கள் நவம்பர் 5, 6 ஆகிய இரண்டு நாட்களும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை. இதர வணிக ரீதியிலான வாகனங்கள் அவிநாசி சாலையை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. நவம்பர் 5 ஆம் தேதி காலை 7 மணி முதல் 2 மணி வரை விரைவான பயணத்தை மேற்கொள்ள வாகன ஓட்டுநர்கள் அவிநாசி சாலையைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
நவம்பர் 5 ஆம் தேதி காலை 9 மணி முதல் 2 மணி வரை சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் நீலம்பூரில் இருந்து சிந்தாமணிபுதூர், ஒண்டிபுதூர், சிங்காநல்லூர், இராமநாதபுரம், சுங்கம் ரவுண்டானா, வெஸ்ட் கிளப் ரோடு, எல்.ஐ.சி சந்திப்பு வழியாக காந்திபுரம் செல்லலாம்.
கோவையிலிருந்து அவிநாசி சாலை வழியாக திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் காந்திபுரத்தில் இருந்து சத்தி ரோடு, கணபதி, வாட்டர் டேங்க், விளாங்குறிச்சி, காளப்பட்டி நால்ரோடு, தொட்டிபாளையம் வழியாக நீலாம்பூர் பைபாஸ் சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
திருச்சி சாலையிலிருந்து சத்தியமங்கலம் மற்றும் மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்பவர்கள் இராமநாதபுரம் சந்திப்பு, சுங்கம் சந்திப்பு, கிளாசிக் டவர், அரசு மருத்துவமனை, கூட்ஸ் ஷெட் ரோடு, அவிநாசி ரோடு மேம்பாலம், புரூக்பாண்ட் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, சங்கனூர் வழியாக மேற்கண்ட இடங்களுக்கு செல்லலாம். ஹோப் காலேஜ், பீளமேடு மற்றும் எஸ்.என்.ஆர் ஆகிய பகுதிகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சத்தி சாலையிலிருந்து கணபதி, காந்திபுரம் வழியாக அவிநாசி ரோடு செல்பவர்கள் சரவணம்பட்டி சோதனை சாவடியிலிருந்து இடது புறம் திரும்பி காளப்பட்டி வழியாக செல்லலாம். சத்தி சாலையிலிருந்து திருச்சி ரோடு, பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்பவர்கள் கணபதி, ஆவாரம்பாளையம் மேம்பாலம், மகளிர் பாலிடெக்னிக், லட்சுமி மில் சந்திப்பு, புலியகுளம் மற்றும் இராமநாதபுரம் சந்திப்பு வழியாக செல்லலாம்.l