குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூபாய் 750 வழங்கப்படும் - முதல்வர் அறிவிப்பு..!
பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக ரூபாய் 750 பணமாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அனைத்து அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் இந்த பணத்தொகை வரவு வைக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நிலையில், இந்த வருடம் பரிசுத்தொகை மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி தமிழக மற்றும் புதுச்சேரியில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகுப்புடன் உங்கள் பரிசுத் தொகை வழங்கப்படும்.
அந்த வகையில் தமிழகத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் உங்கள் வைக்கத் தேவையான பச்சரிசி சர்க்கரை ஏலக்காய் உள்ளிட்ட அனைத்து பொருட்களுடன் கூடிய உங்கள் பரிசுத் தொகப்பும் பொங்கல் பரிசு தொகையும் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு நிதி பற்றாக்குறை காரணமாக உங்கள் பரிசுத் தொகை வழங்கப்படாது எனவும் பரிசுத்தொகுப்பு மட்டுமே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த பரிசுத்தொகப்பில் ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது இதனை அடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடைகளில் இன்று ஜனவரி 3 முதல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.