1. Home
  2. தமிழ்நாடு

முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியம், மருத்துவப் படி உயர்வு: முதல்வர் அறிவிப்பு..!

Q

முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தையும், மருத்துவப் படியையும் உயர்த்த வேண்டுமென உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி, சட்டப்பேரவை மற்றும் மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் மாதம் ரூ. 15,000 -லிருந்து ரூ. 17,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

அவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப்படி ரூ. 75,000 என்பது ரூ. 1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். ஏற்கெனவே இந்த ஆண்டின் மருத்துவப்படி வழங்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள ரூ. 25,000 விதிகள் திருத்தம் செய்யப்பட்டபிறகு வழங்கப்படும்" என்று அறிவித்தார்.

சட்டப்பேரவை மற்றும் மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ. 30,000-லிருந்து ரூ. 35,000 ஆக உயர்த்தப்படும்.

Trending News

Latest News

You May Like