1. Home
  2. தமிழ்நாடு

அக்டோபர் 1 முதல் பள்ளிகளில் வகுப்புகள் தொடக்கம்!?

அக்டோபர் 1 முதல் பள்ளிகளில் வகுப்புகள் தொடக்கம்!?


தமிழகத்தில் அக்டோபர் முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்படலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு வழிகாட்டுதலின்படி,தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை படிக்கும் மாணவர்கள் பள்ளி செல்வதற்கான அறிவிப்பு வெளிவரும் எனக் கூறப்படுகிறது. ஐந்து மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் இணையவழியில் வகுப்புகளை நடத்தி வருகின்றனஅரசுப் பள்ளி மாணவர்கள் வாட்ஸ்ஆப், யூ டியூப் மற்றும் கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்களைக் கற்றுவருகின்றனர்.

வீட்டில் இருந்தபடியே பாடங்கள் படித்து வந்தாலும், நேரடி வகுப்புகள் மூலமே முழுமையான கல்வியைப் பெறமுடியும் என கல்வித்துறை அதிகாரிகள் கருதுகின்றனர். எனவே பள்ளிகளில் வகுப்புகளை படிப்படியாக தொடங்குவது பற்றி தமிழக அரசு முடிவெடுத்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் மாதத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் ஒன், பிளஸ் 2 வகுப்புகளும், அதைத் தொடர்ந்து படிப்படியாக மற்ற வகுப்புகளும் தொடங்கப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனியார் பள்ளிகள் திறப்பு பற்றி மத்திய அரசின் வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து, சமூக இடைவெளியுடன் இருக்கைகள், கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தனியார் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

newstm.in

Trending News

Latest News

You May Like