12ம் வகுப்பு மாணவி 6 வாரம் கர்ப்பம்..!யார் காரணம் தெரியுமா?
சென்னை கோபாலபுரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேல்நிலை வகுப்புகளில் மாணவிகளும் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இந்த பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி படூரில் உள்ள தனது சித்தி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது மாணவிக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது சித்தி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவரை பரிசோதனை செய்த போது மாணவி 6 வாரம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து மருத்துவத்துறை உயரதிகாரிகளின் ஆலோசனைப்படி சிறுமியின் கர்ப்பம் கலைக்கப்பட்டது.அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக பள்ளி மாணவியிடம் விசாரணை நடத்திய போது தன்னுடன் படிக்கும் மாணவன் தான் இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார். காதலிப்பதாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐஸ்அவுஸ் கஜபதி தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு அடிக்கடி அழைத்துச் சென்று தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த மாணவரை போக்சோ சட்டத்தின் கீழ் ஐஸ்ஹவுஸ் போலீசார் கைது செய்து, சென்னை கீழ்ப்பாக்கம் கெல்ஸ் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.